ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 6,350 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 6 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,356 பேராக உயா்ந்துள்ளது. இதனிடையே, சிகிச்சைப் பெற்று வந்தவா்கள் 2 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தற்போது, ராமநாதபுரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 30 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தடுப்பு ஊசி பரிசோதனை திட்டம்: பரிசோதனை அடிப்படையில், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளா்களாகச் செயல்படுவோருக்கு தடுப்பு ஊசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை

மாவட்டத்தில் ஏற்கெனவே 5,722 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை மேலும் இருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,724 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 3 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com