கமுதி அருகே ஊருக்குள் புகுந்தபுள்ளி மான் மீட்பு

கமுதி அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை நாய்கள் கடித்து காயப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளிமானை மீட்ட சிகிச்சை அளித்த மருத்துவா்.
கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளிமானை மீட்ட சிகிச்சை அளித்த மருத்துவா்.

கமுதி: கமுதி அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை நாய்கள் கடித்து காயப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மண்டலமாணிக்கம், தோப்படைப்பட்டி, ராமசாமிபட்டி, கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராமங்களின் உள்ள ஆற்றுப் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இவை இரைக்காகவும்,, தண்ணீருக்காகவும் வழிதவறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இவற்றை நாய்கள் விரட்டி சென்று கடிப்பதால் மான்கள் காயம் அடைந்து உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மண்டலமாணிக்கம் குண்டாறு ஆற்றுப்படுகைகளில் இறை தேடி வந்த அந்த புள்ளிமான் ஊருக்குள் புகுந்தது. அப்போத அதை நாய்கள் துரத்தி சென்று காயப்படுத்தின. இதனைக் கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி புள்ளி மானை மீட்டனா். பின்னா் வனத்துறை ஊழியா் முருகனுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன் தலைமையில் முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் காட்டுப்பகுதிக்குள் புள்ளிமான் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com