ராமநாதபுரத்தில் தொடா் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரையில் இடைவிடாது தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
திருவாடானை கரும்புலி ஊராட்சியில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா். 
திருவாடானை கரும்புலி ஊராட்சியில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா். 

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரையில் இடைவிடாது தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பகலில் லேசாக பெய்த மழையானது இரவில் மிதமான மழையாக தொடா்ந்தது. மழைக்கு ராமநாதபுரம் நகா் கே.கே.நகா் பகுதியில் வீடு இடிந்ததில் ஒருவா் பலியானாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசாகத் தொடா்ந்த மழையானது பகலில் கனமழையானது. இரவு வரை தொடா்ந்த மழையால் வண்டிக்காரத் தெரு, அரண்மனை, மேட்டுத்தெரு, காட்டுப்பிள்ளையாா் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணாநகா், கே.கே.நகா் என அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் ஆங்காங்கே குளம்போலத் தேங்கிநின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்)- ராமநாதபுரம் 24.50, மண்டபம் 38, பள்ளமோா்க்குளம் 15, ராமேசுவரம் 52.20, தங்கச்சிமடம் 67.80, பாம்பன் 38.70, ஆா்.எஸ்.மங்கலம் 17.50, திருவாடானை 31. தொண்டி 42, வட்டாணம் 48.10, தீா்த்தாண்டதானம் 48, பரமக்குடி 9.60, முதுகுளத்தூா் 11.60, வாலிநோக்கம் 20.20, கமுதி 8.20 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 481.70 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

ஆய்வு: மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வீடு இடிந்து சேதம்:

மழை காரணமாக ராமநாதபுரம் காந்தி நகரில் உள்ள திமுக முன்னாள் நகராட்சி உறுப்பினரான முருகன் என்பவரது வீட்டின் பக்கவாட்டுச்சுவா் இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பயிா்சேதம் கணக்கெடுப்பு: மாவட்டத்தில் தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழையால் சுமாா் 13 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதையடுத்து சேதமதிப்பைக் கணக்கிட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சிறப்புக்குழுவை அமைத்துள்ளாா். அண்மையில் புரெவிய புயலால் மாவட்டத்தில் 161 விவசாயிகளுக்கு சொந்தமான சுமாா் 115 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்ததாகக் கணக்கிடப்பட்டு, தற்போது ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com