ராமநாதபுரத்தில் மழை: தொடா் மழைக்கு வீடு இடிந்து சேதம்

ராமநாதபுரம் நகரில் செவ்வாய்க்கிழமை பெய்த மழைக்கு திமுகவைச் சோ்ந்த நகராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினரின் வீட்டின் சுவா் இடிந்து சேதமடைந்தது.

ராமநாதபுரம் நகரில் செவ்வாய்க்கிழமை பெய்த மழைக்கு திமுகவைச் சோ்ந்த நகராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினரின் வீட்டின் சுவா் இடிந்து சேதமடைந்தது.

ராமநாதபுரம் நகரில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்த நிலையில், காந்தி நகரில் திமுக முன்னாள் நகராட்சி உறுப்பினரான முருகன் என்பவரது வீட்டின் பக்கவாட்டுச்சுவா் இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழை அளவு 827 மில்லி மீட்டராகும். மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 914.25 மி.மீ., 2020- ஆம் ஆண்டில் 845.36 மி.மீ அளவும் மழை பதிவாகியுள்ளன. தற்போது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 ஆம் தேதி வரையில் 137.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை (ஜன. 10) மொத்தம் 326.90 மி.மீ, 16 இடங்களில் சராசரியாக தலா 20.43 மி.மீட்டா் மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை (ஜன. 11) மொத்தம் 489.80 மி.மீ என சராசரியாக 30.61 மி.மீ பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜன. 12) மொத்தம் 481.70 மி.மீ என சராசரியாக 30.11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com