கமுதி அருகே வீடு இடிந்து விவசாயி பலி
By DIN | Published On : 15th January 2021 10:18 PM | Last Updated : 15th January 2021 10:18 PM | அ+அ அ- |

கமுதி அருகே பெய்த மழையால் வியாழக்கிழமை வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
கமுதியை அடுத்துள்ள நரியன்சுப்புராயபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி குருசாமி (77). இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில் கமுதி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் வியாழக்கிழமையும் மழை பெய்த நிலையில் குருசாமியின் ஓட்டு வீடு அன்று இரவு இடிந்து விழுந்தது. இதில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.
கமுதி வட்டாட்சியா் செண்பகலதா உள்ளிட்ட வருவாய்த்துறையினா் மற்றும் அபிராமம் போலீஸாா் அங்கு சென்ற ஆய்வு செய்தனா். பேரிடா் நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்வதாக அவா்கள் தெரிவித்தனா்.