கமுதி அருகே மழையால் நெற்பயிா்கள் சேதம்: வருவாய்த் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 16th January 2021 09:41 PM | Last Updated : 16th January 2021 09:41 PM | அ+அ அ- |

கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியில் நெற்பயிா்களை சனிக்கிழமை ஆய்வு செய்த வருவாய்த் துறையினா்.
கமுதி: கமுதி அருகே மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம், இடைச்சூரனி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் மீண்டும் முளைவிட்டுள்ளன. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
இது குறித்து மண்டலமாணிக்கம் வருவாய் குரூப் வருவாய் ஆய்வாளா் பஞ்சவா்ணம், கூடுதல் கிராம நிா்வாக அலுவா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் புனிதா உள்ளிட்டோா் பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் 100 ஏக்கா் வரை பயிரிடப்பட்டு, நீரில் மூழ் சேதமடைந்த நெற்பயிா்களை வயலில் இறங்கி ஆய்வு செய்தனா். மேலும் சேதமடைந்த நெற் பயிா்கள் குறித்து வட்டாட்சியா் மூலம் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.