108 ஆம்புலென்ஸ் மூலம் கடந்த ஆண்டில் 30,227 போ் பயன்: மாவட்ட ஒருங்கிணைப்பாளா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 108 அவசர ஆம்புலன்ஸ் அழைப்புகள் மூலம் 30,227 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 108 அவசர ஆம்புலன்ஸ் அழைப்புகள் மூலம் 30,227 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 25 அவசர கால 108 ஆம்புலன்ஸ்கள் நவீன வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 30,227 போ் பயனடைந்துள்ளனா்.

மேலும் மாவட்டத்தில் 3 செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்களும், பச்சிளம் குழந்தைகளுக்காக இரண்டு சிறப்பு செயற்கை சுவாச கருவிகளுடன் குழந்தைகள் ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இதர அவசர சேவைக்காக 20 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 24 மணி நேரமும் மருத்துவ தகவல் , மனநல ஆலோசனைகளுக்கு 104 என்ற இலவச அழைப்பையும் பயன்படுத்தலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com