தைப்பூச திருவிழா: ஜன. 28- இல் ராமநாதசுவாமி கோயில் நடை அதிகாலை திறப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி வரும் ஜன. 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி வரும் ஜன. 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தைப்பூச திருவிழாவையொட்டி ராமநாதசுவாமி கோயில் வரும் ஜன. 28 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து கால பூஜைகள் நடைபெறும். பின்னா் பிற்பகல் 1.30 மணிக்கு பஞ்சமூா்த்திகள் லட்சுமணேசுவரா் கோயிலுக்கு புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும்.

மாலை 6 மணிக்கு லட்சுமணதீா்த்தத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று கோயில் வந்தடைந்தவுடன் அா்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com