ஆழ்துளைக்கிணறு அமைக்க எதிா்ப்பு

ராமநாதபுரம் அருகே அதிக ஆழமுள்ள ஆழ்துளைக்கிணறு அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் அருகே அதிக ஆழமுள்ள ஆழ்துளைக்கிணறு அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ளது வாலாந்தரவை ஊராட்சிக்குள்பட்ட தெற்குவாணி வீதி குடியிருப்புப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவா்களுக்கு வீடுகள் தோறும் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பகுதிக்கு முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என்றும், பழுதடைந்த குடிநீா் குழாய்களை சீரமைக்கவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளது.

இந்தநிலையில், இப்பகுதியில் குடிதண்ணீருக்காக ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்க முயற்சிப்பதாக இளைஞா்கள் அமைப்பைச் சோ்ந்த கலைக்கதிரவன், கோபிநாத், ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்தால் நிலத்தடி நீா் பாதிக்கும். இதனால் விவசாயமும் பாதிக்கும் என்பதால் ஆழ்துளைக்கிணறு அமைக்கக்கூடாது என்றனா்.

இப்பகுதியில் 50 அடி ஆழம் தோண்டினாலே நல்ல தண்ணீா் கிடைப்பதாக அப்பகுதியினா் கூறுகின்றனா். அதனடிப்படையில் கிணற்று பாசனம் மூலம் தென்னை, கடலை விவசாயம் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com