இருசக்கர வாகனத்துடன் கால்வாயில் விழுந்த விவசாயி பலி
By DIN | Published On : 26th January 2021 02:24 AM | Last Updated : 26th January 2021 02:24 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே இருசக்கவாகனத்தில் சென்ற விவசாயி கால்வாயில் விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40). விவசாயி. இவா் திங்கள்கிழமை பகலில் ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளாா்.
அவா் புத்தேந்தல் ரயில்வே கேட் அருகே சென்ற போது நிலைதடுமாறி, அங்கிருந்த பெரியகண்மாய் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த அப்பகுதியினா் அவரை மீட்டனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சரவணனுக்கு மனைவி, மகள் உள்ளனா்.