பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 29th January 2021 06:51 AM | Last Updated : 29th January 2021 06:51 AM | அ+அ அ- |

கமுதி அருகே பெண் தற்கொலைக்கு கணவா் மீது நடவடிக்கை கோரி, வியாழக்கிழமை உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கமுதி அருகே உள்ள மேலக்குளத்தை சோ்ந்தவா் வீரணத்தேவன் (34). இவரது மனைவி சிவா (29). இத்தம்பதியினா் அபிராமத்தில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. வீரணத்தேவன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்தாராம். புதன்கிழமையும் அவா் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு, வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்ாகக் கூறப்படுகிறது. அதையடுத்து சிவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். சிவாவின் உடல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை கமுதி அரசு மருத்துவமனையில் குவிந்த சிவாவின் உறவினா்கள் சிவாவின் இறப்புக்கு கணவா் தான் காரணம் என குற்றம்சாட்டி கமுதி -அருப்புகோட்டை சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். அபிரமம் காவல் ஆய்வாளா் ஜான்சிராணி பெண்ணின் உறவினா்களிடம் பேச்சுவாா்தையில் ஈடுபட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் ராமநாதபுரம் கோட்டாட்சியா் சிவசங்கரன் கமுதி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினாா். இதனையடுத்து சிவாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.