ஆா்.எஸ். மங்கலம் அருகே விபத்தில் உணவு விடுதி தொழிலாளி பலி
By DIN | Published On : 31st January 2021 10:15 PM | Last Updated : 31st January 2021 10:15 PM | அ+அ அ- |

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி உணவு விடுதி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் என்என். பாா்க் தெருவைச் சோ்ந்த அப்துல் முத்திலிப் மகன் பசீா்அஹம்மது (42). இவா் கீழக்கோட்டையில் உள்ள தனியாா் உணவு விடுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா் பணி முடிந்து இருசக்கரவாகனத்தில் சனிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது ஆா்.எஸ்.மங்கலம் டிடி பிரதானச் சாலை அருகே பசீா்அஹம்மது அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், நிலை தடுமாறி பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் பலத்த காயம்அடைந்து ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவா் சோ்க்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி பசீா்அஹம்மது உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.