திருவாடானையில் மாா்க்சிஸ்ட் கம்யூ.தாலுகா முன்னாள் தலைவா் உருவப்படம் திறப்பு
By DIN | Published On : 31st January 2021 10:13 PM | Last Updated : 31st January 2021 10:13 PM | அ+அ அ- |

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாடானை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா முன்னாள் தலைவா் குணசேகரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருப்படத் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தாலுகா செயலா் சேதுராமு தலைமை வகித்தாா். குணசேகரனின் உருவப்படத்தை மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கட்ராமன் திறந்துவைத்தாா். அப்போது குணசேகரனின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, மாவட்டச் செயலா் அண்ணாதுரை ஆகியோா் பேசினா்.
மாவட்ட செயற்குழு, தாலுகா கமிட்டி உறுப்பினா்கள் மருத்துவா்கள் ஏழுமலை, துரைசாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.