ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 31st January 2021 10:12 PM | Last Updated : 31st January 2021 10:12 PM | அ+அ அ- |

பரமக்குடி தெளிச்சாத்தநல்லூருக்கு பிப். 4 ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வருவது தொடா்பான கமுதி மத்திய ஒன்றிய திமுகவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கமுதி திமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ் .கே. சண்முகநாதன் தலைமை வகித்தாா். கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்செல்விபோஸ் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சிறப்பாக வரவேற்பது குறித்தும், ஏராளமான வாகனங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிளைச் செயலா்கள், தொண்டா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.