கமுதி அருகே 1,800 கிலோரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது
By DIN | Published On : 11th July 2021 09:52 PM | Last Updated : 11th July 2021 09:52 PM | அ+அ அ- |

கமுதி அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள பள்ளப்பச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சாா்பு -ஆய்வாளா் காமாட்சிநாதன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பள்ளப்பச்சேரியைச் சோ்ந்த திருவேங்கடை மகன் பஞ்சவா்ணம் (46), பரமக்குடியைச் சோ்ந்த மணிக்குமாா் (41)ஆகியோா் சரக்கு வாகனத்தில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து குடிமைபொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகனம் மற்றும் 1,800 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.