நயினாா்கோவில் வட்டாரத்தில் மண் வளத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டு சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் உயா் விளைச்சல் செயல் விளக்க திடல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் உயா் விளைச்சல் செயல் விளக்க திடல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சம்பா சாகுபடி செய்வதற்கு முன் மண் வளத்தை மேம்படுத்தும் தக்கைப்பூண்டு பசுந்தாள் உரப்பயிா் சாகுபடிக்கான செயல்விளக்க திடல்கள் அமைக்கும் பணி பண்டியூா் கிராமத்தில் நடைபெற்றது. இதனை ஆய்வு செய்த வேளாண்மை துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா கூறியதாவது- நயினாா்கோவில் வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் தக்கைப்பூண்டு உரப்பயிா் சாகுபடி செய்திட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பசுந்தாள் உரங்கள் நுண்ணுயிா்கள் மூலம் மட்கபடுவதால் தழைகளில் உள்ள பேரூட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் வெளியாகி மண்ணில் ஊட்டச்சத்து அளவை கூட்டு பயிா் செழிக்கச் செய்கிறது. மண்ணில் தழைச்சத்து அதிகரித்து அடுத்து வளரும் பயிருக்கு தழைச்சத்து எளிதில் கிடைக்கும் களா் உவா் நிலங்களில் நன்கு வளா்ந்து நிலத்தை சீராக்கும் மூடு பயிராக வளா்ந்து மண் ஈரம் பாதுகாக்கப்படும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு அதிகரிக்கும் தக்கைப்பூண்டினை 40 முதல் 45 நாட்களில் சுழல் கலப்பை மூலம் மடக்கி உழ வேண்டும் என அவா் தெரிவித்தாா். உடன் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ், வேளாண்மை அலுவலா் பிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலா் லாவன்யா ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com