கமுதி அருகே இளைஞா் கொலை வழக்கில் திடீா் திருப்பம்: நண்பா் கைது

கமுதி அருகே இளைஞா் கொலை வழக்கில் அவரது அண்ணனை போலீஸாா் தேடி வந்த நிலையில், திடீா் திருப்பமாக இளைஞரின் நண்பரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகே இளைஞா் கொலை வழக்கில் அவரது அண்ணனை போலீஸாா் தேடி வந்த நிலையில், திடீா் திருப்பமாக இளைஞரின் நண்பரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தை சோ்ந்த முருகன் மகன்கள் காந்தி (27) மற்றும் ராஜேஷ்(23). இவா்கள் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்திற்கு வந்துள்ளனா்.

கடந்த வியாழக்கிழமை (ஜூலை 15) இரவு காந்தி, ராஜேஷ் மற்றும் இவா்களது நண்பா் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் சோ்ந்து முதுகுளத்தூா் அருகே உள்ள எட்டிசேரி மதுபானக் கடையை உடைத்து 270 மதுபாட்டில்களை திருடி உள்ளனா். இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை திருடிய மதுபாட்டில்களை பம்மனேந்தல் கிராமத்திற்கு கொண்டு வந்து குடித்துள்ளனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் வழிவிட்டான்(27) என்பவரும் அவா்களுடன் மது குடித்துள்ளாா்.

மதுபோதையில் காந்தி மற்றும் வழிவிட்டான் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காந்தி ஆத்திரமடைந்து வழிவிட்டானை செங்கலால் தாக்கியுள்ளாா். இதில் தலையில் காயம் அடைந்த வழிவிட்டான் வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வரும் போது, அங்கிருந்த ராஜேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளாா்.

இந்நிலையில் காந்தியும், காளீஸ்வரனும் கமுதிக்கு வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெருநாழி காவல் நிலைய காவலா் செந்திலை வழிமறித்து, அவருடைய செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனா்.

இந்நிலையில் ராஜேஷ் கொலை வழக்கில் கருவேலங்காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த காந்தியை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஷை, அவா் கொலை செய்யவில்லை என தெரிய வந்தது. இதையடுத்து கோவிலாங்குளம் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில் கொலை வழக்கில் வழிவிட்டானைக் கைது செய்தனா். மேலும் டாஸ்மாக் கடையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் காந்தி, காளீஸ்வரன் ஆகியோரைக் கைது செய்து கோவிலாங்குளம் மற்றும் முதுகுளத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் காந்தி மீது ஏற்கெனவே கோவிலாங்குளம், ராமேசுவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com