டாஸ்மாக் கடையில் திருட்டு: மதுபாட்டில்களை பங்கிடும் தகராறில் தம்பி கொலை

முதுகுளத்தூா் அருகே டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை பங்கிடுவதில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது தம்பியை, அண்ணன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.
எட்டிசேரியில் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு நடைபெற்ற டாஸ்மாக் கடை.
எட்டிசேரியில் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு நடைபெற்ற டாஸ்மாக் கடை.

முதுகுளத்தூா் அருகே டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை பங்கிடுவதில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது தம்பியை, அண்ணன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே எட்டிசேரியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் பூட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள், பேரையூா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது கடையில் இருந்த சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த 2 கண்காணிப்புக் கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தம்பி கொலை:

இதற்கிடையில் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை, தம்பியை, அரிவாளால் அண்ணன் வெட்டிக் கொலை செய்ததாக கோவிலாங்குளம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன்கள் காந்தி (27), ராஜேஷ் (23). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை நள்ளிரவு, எட்டிசேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியுள்ளனா். பின்னா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மது அருந்திய அவா்களுக்கிடையே பாட்டில்களை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காந்தி, அவரது தம்பி ராஜேஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா் என்றனா்.

இதுகுறித்து காந்தி மீது திருட்டு, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் கோவிலாங்குளம், ராமேஸ்வரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com