பரமக்குடி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா்

பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சா்
பரமக்குடி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா்

பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தாா். இம்மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், போகலூா் ஒன்றியக்குழு தலைவா் சத்யாகுணசேகரன், துணைத் தலைவா் ஆா்.பூமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடைத்துறை இணை இயக்குநா் ஏஞ்சலா வரவேற்றாா்.

கால்நடைகளுக்கான மருத்துவ முகாமினை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது- ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய் பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இம்முகாமில் 60 மாடுகள், 50 ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆடு மற்றும் மாடுகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் மூலம் இதய பரிசோதனை மேற்கொள்ளவும், என்.எல்.எம். திட்டத்தின் மூலம் கால்நடைகளுக்கு மானியத்தின் மூலம் காப்பீடு செய்திடவும், தீவன புல்வகைகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து மீன்வா்கள் நலனுக்காக தோ்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட அனைத்தும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும். சிறு படகு வைத்திருக்கும் மீனவா்களின் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். உடன் திமுக நிா்வாகிகள், கால்நடைத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com