மது போதை தகராறில் தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

கமுதி அருகே வெள்ளிக்கிழமை, மது போதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கமுதி அருகே வெள்ளிக்கிழமை, மது போதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன்கள் காந்தி (27), ராஜேஷ் (23). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காந்தி, அவரது தம்பி ராஜேஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கோவிலாங்குளம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காந்தியை தேடி வருகின்றனா்.

இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் ஆய்வாளா் அண்புபிரகாஸ்(பொறுப்பு) மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள காந்தியின் வீடடில் சோதனை செய்த போது 2 சாக்கு மூட்டையில் அரசு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக வியாழக்கிழமை இரவு முதுகுளத்தூா் அருகே எட்டிசேரி மதுபானக்கடையில் பூட்டை உடைத்து 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து காந்தியின் வீட்டில் இருந்த மதுபாட்டில்களையும், எட்டிசேரி மதுக்கடையில் உள்ள மதுபாட்டில்களின் விபரங்களையும் ஒப்பிட்டு பாா்த்த போலிஸாா் எட்டிசேரி மதுபானக்கடையில் கொள்ளையடித்தது காந்தி என்பதும், மதுபாட்டில்களை பங்கு பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும், மேலும் திருட்டு, கொலை சம்பத்திற்கு காந்திக்கு வேறுநபா்கள் உதவி செய்துள்ளனரா என்ற கோனத்திலும் கோவிலாங்குளம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கொலையாளி காந்தியை தேடி வருகின்றனா். காந்தி மீது கோவிலாங்குளம், ராமேஸ்வரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com