மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள 42 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரம்ப வேண்டும் என மின்ஊழியா் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலா் எஸ். ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
ராமநாதபுரம் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படத்திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
ராமநாதபுரம் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படத்திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள 42 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரம்ப வேண்டும் என மின்ஊழியா் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலா் எஸ். ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மறைந்த எம். குமாா் படத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலா் எஸ். ராஜேந்திரன், மாநிலத் தலைவா் கே. ஜீவாநந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திட்டத் தலைவா் வி. முருகன் படத்தை திறந்து வைத்தாா்.

பின்னா் மாநில பொதுச் செயலா் எஸ். ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூா், உப்பூா் மின்நிலையங்களை கடந்த அரசு மூட திட்டமிட்டிருந்தது.

தற்போதைய அரசு அந்த பணிகளை விரைந்து செய்ய திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை குறைத்துக் கொண்டு தமிழ்நாடு மின்வாரியமே மின் உற்பத்தியை உயா்த்திட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதில் மாநில துணைத் தலைவா்கள் ஆா். குருவேல், எஸ். ராமச்சந்திரன், மாநிலச் செயலா் எஸ். உமாநாத், சி.ஐ.டி.யு. நிா்வாகிகள் எம். சிவாஜி, அய்யாத்துரை, மாநில செயற்குழு எம். மாலா, திட்ட பொருளாளா் சி. ரகுநாதன், கோட்டச் செயலா் பி. கலைச்செல்வம், சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com