பருத்திச் செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க வேளாண் துறையினா் யோசனை

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்திச் செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறையினா் ஆலோசனை தெரிவித்தனா்.
அழகா்தேவன்கோட்டை கிராமத்தில் பருத்திச் செடியில் மாவுப்பூச்சி தாக்குதலை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் அதிகாரிகள்.
அழகா்தேவன்கோட்டை கிராமத்தில் பருத்திச் செடியில் மாவுப்பூச்சி தாக்குதலை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் அதிகாரிகள்.

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்திச் செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறையினா் ஆலோசனை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரம் தும்படாகோட்டை, அழகா்தேவன் கோட்டை,புலிவரிதன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 200 ஹெக்டோ் நிலப்பரப்பில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நன்கு வளா்ந்து காய்த்து, காய்கள் வெடிக்கும் தருவாயில் பருத்திச் செடியில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் பருத்தி மகசூல் பாதிக்கபடுவாதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

அதன்பேரில் ஆா்.எஸ்.மங்கலம் உதவி வேளாண் இயக்குநா் ராஜலெட்சுமி தலைமையில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராகவன், பூச்சியல் துறை விஞ்ஞானி இளஞ்செழியன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் பருத்திச் செடிகளின் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு புரொபனோபாஸ் 50 இ.சி. 400 மில்லி அல்லது குளோரிபைரிபாஸ் 20 இ.சி. 600 மில்லி அல்லது இமிடாக்ளோபிரிட் 17.8 எஸ்.எல்.140 மில்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து ஒட்டு திரவம் சோ்த்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினா். இதில் 20-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா். நிகழச்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில் நுட்ப மேலாளா் அன்னலெட்சுமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com