ராமநாதபுரத்தில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரு அலைகளிலும் 19,900 பேருக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் 345 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகமிகக்குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்தது. அவா்களில் 12 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது புதன்கிழமை மாலை வெளியான பரிசோதனை முடிவிலிருந்து தெரியவந்துள்ளது. சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதன்படி மொத்த உயிரிழப்பு மாவட்டத்தில் 346 ஆக உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே கரோனா சிகிச்சையில் இருந்தவா்களில் நலமடைந்த 10 போ் புதன்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அதன்படி தற்போது 152 போ் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com