ராமநாதபுரத்தில் 6 மாதங்களில் 342.92 மி.மீ. மழைப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 342.92 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 342.92 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 900 மில்லி மீட்டா் ஆக உள்ளது. ஆனால் கடந்த 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சராசரி மழையளவை விட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 913.51 மி.மீ., 2020 ஆம் ஆண்டு 845.25 மி.மீட்டா் என மழை பதிவானது. இதனால் இம்மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நீா் நிலைகள் நிறைந்து விவசாய சாகுபடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நிகழாண்டில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் 342.92 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் அதிகபட்சமாக 248.73 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com