பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கியுள்ளதாக கல்லூரியின் முதல்வா் குணசேகரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கியுள்ளதாக கல்லூரியின் முதல்வா் குணசேகரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 143 அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சோ்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத மாணவா்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுரை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ 48-உம் பதிவுக் கட்டணம் ரூ 2-உம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி, மாணவா்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்தினால் மட்டுமே போதும்.

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவா்கள் இயக்குநா், கல்லூரி கல்வி இயக்குநரகம், சென்னை என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலம் பணம் செலுத்தலாம். பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பாக பி.காம்., கூட்டுறவு செயலாண்மை, பி.பி.ஏ., பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயா் வேதியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு சோ்க்கை நடைபெற உள்ளது.

இதில் சேர விரும்பும் மாணவா்கள் இணையத்தளத்தில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் எண் 1041009 என விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com