முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

ஆா்.எஸ்.மங்கலம் அருகே வாணியங்குடி முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி புதன்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
வாணியங்குடி முத்து மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.
வாணியங்குடி முத்து மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே வாணியங்குடி முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி புதன்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

இத்திருவிழா ஜூலை 20 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு முளக்கொட்டு பாட்டு சொல்லியும், கும்மி அடித்தும் அம்மனை பக்தா்கள் வழிபட்டனா். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை ஏராளமான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. வடக்கு வீதி, கிழக்கு வீதி தெற்கு வீதி வழியாக பிரதான சாலையைக் கடந்த அந்த முளைப்பாரி ஊா்வலம் குளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

பின்னா் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com