ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1000 படுக்கைகள்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புச் சிகிச்சைக்கு 1000 படுக்கைகள் தயாராக உள்ளன.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புச் சிகிச்சைக்கு 1000 படுக்கைகள் தயாராக உள்ளன.

இம்மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 450 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக இரு கட்டடங்களில் உள்ள அனைத்து வாா்டுகளும் கரோனா சிகிச்சைக்கு ஏற்றாற்போல மாற்றப்பட்டுள்ளன. அப்படுக்கைகளில் 236 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவைகளாக இருந்தன.

கரோனா பாதிப்பு தினமும் 350 என்ற நிலையில், படுக்கையை கூடுதலாக்க மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கான புதிய கட்டடப் பிரிவில் கூடுதலாக 550 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

இதனிடையே, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சனிக்கிழமை 133 என்ற அளவுக்கு குறைந்திருந்தது. ராமநாதபுரம் நகராட்சியிலும் கடந்த ஒரு வாரமாக தினமும் ஓரிருவருக்கே பாதிப்பு இருந்துவருகிறது. ஆகவே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் படுக்கை வசதியை 1000 ஆக நீடிக்கவும், ஆக்சிஜன் வசதியை 246 ஆக உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com