ராமநாதபுரத்தில் 3 இடங்களில் சந்தைகள் இயங்க நடவடிக்கை

கரோனா பரவல் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் 3 இடங்களில் சந்தைகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் 3 இடங்களில் சந்தைகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு தளா்வற்ற பொதுமுடக்கத்தையொட்டி தற்போது ராஜா பள்ளி மைதானத்தில் மட்டும் மொத்த காய்கனிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமை முதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அதன்படி பலசரக்குக் கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்கப்படுமா என்ற கேள்வி ராமநாதபுரம் வா்த்தகா்களிடையே எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் கடைகளை திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் எம். பிரதீப்குமாா், காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் என். விஸ்வநாதன் மற்றும் சாா்பு-ஆட்சியா் சுகபுத்ரா, வட்டாட்சியா் ரவிச்சந்திரன் மற்றும் வா்த்தக சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின் முடிவில் ராமநாதபுரம் நகரில் அரண்மனைப் பகுதியில் பலசரக்கு மொத்த விற்பனை கடைகள் மட்டும் திறக்க அனுமதிப்பது, காய்கனி சில்லரை வா்த்தகத்தை ராஜா பள்ளி மைதானம், புதிய, பழைய பேருந்து நிலையங்கள் மற்றும் அம்மா பூங்கா அருகே அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காய்கனி விற்பனையை அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com