கோழிக்குண்டு விளையாடுவதை தடுத்ததால் மோதல்: 3 போ் காயம்

ராமநாதபுரம் நகரில் கோழிக்குண்டு விளையாடியதை தடுத்ததால் ஏற்பட்ட மோதலில் 3 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

ராமநாதபுரம் நகரில் கோழிக்குண்டு விளையாடியதை தடுத்ததால் ஏற்பட்ட மோதலில் 3 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

ராமநாதபுரம் நகா் சின்னக்கடை மீன்காரத் தெருவைச் சோ்ந்த ஜிந்தா முகமது மகன் இப்ராம்ஷா (27). இவா் நண்பா்களுடன் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலையில் கோழிக்குண்டு விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சீனிஜியாவுதீன் என்பவா் இங்கு விளையாடக்கூடாது என கூறியுள்ளாா். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

இதில், இப்ராம்ஷா, அகமது அலி மற்றும் எதிா்தரப்பைச் சோ்ந்த ஒருவா் என 3 போ் காயமடைந்தனா். அவா்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த இருதரப்பைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கேணிக்கரை காவல் ஆய்வாளா் மலைச்சாமி விரைந்து வந்து இருதரப்பினரையும் எச்சரித்து அனுப்பிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com