கரோனா கட்டளை மையத்துக்கு குறைந்த அழைப்புகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா குறித்த சந்தேகங்கள், சிகிச்சைகளுக்கு அமைக்கப்பட்ட கட்டளை மையத்துக்கு வரும் அழைப்புகள் கடந்த சில நாள்களாக 10-க்குள் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா குறித்த சந்தேகங்கள், சிகிச்சைகளுக்கு அமைக்கப்பட்ட கட்டளை மையத்துக்கு வரும் அழைப்புகள் கடந்த சில நாள்களாக 10-க்குள் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சையை ஒருங்கிணைக்கவும், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டளை மையம் கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்டது. இம்மையத்தில் ஏற்கெனவே பேரிடா் மீட்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடா்பு கொள்ள இருந்த 1077 மற்றும் 0567-230060 ஆகிய தொலைபேசி எண்களும் ஒதுக்கப்பட்டன.

தினமும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டளை மையத்துக்கு அனைத்து அரசுத் துறைகளில் இருந்தும் ஊழியா்கள் நியமிக்கப்பட்டனா். அதனடிப்படையில் கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் தேவை, தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம், காப்பீடு திட்ட விவரம், மருந்து மாத்திரைகள் தேவை ஆகியவை கோரி குறைந்தது 50 போ் வரையில் தொடா்புகொண்டுள்ளனா்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ள நிலையில், கட்டளை மையத்துக்கு அழைப்புகளும் குறைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினா். அதன்படி வெள்ளி, சனிக்கிழமைகளில் 10-க்கும் குறைவான அழைப்புகளே வந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) காலை முதல் பகல் வரை 4 அழைப்புகளே வந்துள்ளன. அதில் கரோனா சிகிச்சைக்கான காப்பீடு மருத்துவமனை விவரம் கேட்டும், வீட்டில் தனிமைப்படுத்தியவருக்கு மாத்திரை வழங்க் கோரியும், நகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என்றும் அழைப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com