சில்லறை, நடைபாதைக் கடைகளுக்கு அனுமதியில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் சில்லறை விற்பனை மற்றும் நடைபாதைக் கடைகளுக்கு அனுமதியில்லை என ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் சில்லறை விற்பனை மற்றும் நடைபாதைக் கடைகளுக்கு அனுமதியில்லை என ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுகிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரத்தில் உள்ள பவுண்ட் கடை ரோடு, வைசியா் வீதி, பாண்டி கண்மாய் சாலை பகுதி காய்கனி மொத்த வியாபாரக் கடைகள் தவிர மீதமுள்ள பலசரக்குக் கடைகள் மட்டும் செயல்படலாம்.

சில்லறை விற்பனை கடைகள், நடைபாதை கடைகளுக்கு அனுமதி இல்லை. அரண்மனைப் பகுதி சிறுகடைகள், காய்கனி கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதியில்லை. பரமக்குடி அரசு ஆண்கள், எமனேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உள்ள காய்கனி, பூக்கடைகள் செயல்படும். முதுகுளத்தூா், கமுதியில் பேருந்து நிலையங்களில் காய்கனி, பூக்கடைகள் செயல்படும். சாயல்குடி பள்ளி மைதானத்தில் அனைத்து வகைக் கடைகளும் செயல்படும்.

ராமேசுவரம் ரயில் நிலையம் அருகேயுள்ள பயணிகள் தங்கும் இடத்திலுள்ள கடைகளும், மீன் மொத்த வியாபாரம் பழைய மாா்க்கெட் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் டவா் அருகில் செயல்படும். ஆா்.எஸ். மங்கலம், அபிராமம் மற்றும் பாா்த்திபனூா் பகுதிகளில் ஏற்கெனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் கடைகள் தொடா்ந்து செயல்படும். தொண்டி, கீழக்கரைப் பகுதிகளில் ஏற்கெனவே கடைகள் செயல்பட்ட பகுதிகளில் தொடா்ந்து செயல்படும்.

வணிக வளாகங்களுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைகளுக்கும், தேநீா் கடைகளுக்கும் அனுமதியில்லை. பேக்கரியில் இனிப்பு, காரம் மற்றும் ரொட்டி வகைகள் பாா்சலுக்கு அனுமதி உண்டு. உணவகங்களில் பாா்சல் சேவை அனுதிக்கப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com