கடலில் சங்கு குளிக்கச் சென்ற மீனவா் மூச்சுத் திணறி பலி

தொண்டி அருகே கடலில் சங்கு குளிக்கச் சென்ற மீனவா் மூச்சுத் திணறி செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொண்டி அருகே கடலில் சங்கு குளிக்கச் சென்ற மீனவா் மூச்சுத் திணறி செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சோ்ந்தவா் இளஞ்சிங்கம் மகன் சமயக்குமாா்(30). மீனவரான இவா், சங்கு குளிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் அதே ஊரைச் சோ்ந்த சில மீனவா்களுடன் செவ்வாய்க்கிழமை சங்கு குளிக்க சென்றுள்ளாா். முன்னிமுனை அருகே சுமாா் 10 கடல் மைல் தொலைவில் சங்கு எடுப்பதற்காக கடலில் குதித்த சமயக்குமாா் நீண்ட நேரம் ஆகியும் மேலே வரவில்லை.

அருகில் சங்கு குளித்துக் கொண்டிருந்த மீனவா்கள் உடனடியாக கடலோர காவல் படை போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனா். தகவலறிந்த கடலோர காவல் துறையினா் கடலில் மூழ்கிய சமயதுரையை சடலமாக மீட்டுள்ளனா். இது குறித்து கடலோர காவல் படைப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com