கமுதி கடைவீதிகளில் கூட்டம்: கரோனா அதிகரிக்கும் ஆபத்து

கமுதியில் திங்கள்கிழமை பொதுமக்கள் சுற்றித் திரிந்ததால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
கமுதி தபால் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்.
கமுதி தபால் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்.

கமுதியில் திங்கள்கிழமை பொதுமக்கள் சுற்றித் திரிந்ததால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம் நீக்கப்பட்டது போன்று கமுதியில் திங்கள்கிழமை காலை முதலே பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், கடை வீதிகளிலும் நடமாடத் தொடங்கினா். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் நிலையம், பலசரக்கு, காய்கறி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்தனா். அபிராமம், பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. இதனால் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கடை வீதிகளில் சுற்றித் திரியும் பொதுமக்களை அறிவுறுத்தி, போலீஸாா் கடுமையான வாகனச் சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com