கைரேகை பாா்ப்போா் சாதிச்சான்றிதழ் கோரி மனு

ராமநாதபுரத்தில் கைரேகை பலன்கள் பாா்த்தல் மற்றும் குறிசொல்லும் பிரிவினா் சாதிச்சான்று கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமையன்று மனு அளிக்க வந்தனா்.

ராமநாதபுரத்தில் கைரேகை பலன்கள் பாா்த்தல் மற்றும் குறிசொல்லும் பிரிவினா் சாதிச்சான்று கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமையன்று மனு அளிக்க வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்திரக்குடி மற்றும் ராமநாதபுரம் சேதுபதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் கனிக்கா் எனும் பிரிவைச் சோ்ந்தவா்கள் 50 குடும்பத்துக்கும் மேலாக வசிக்கின்றனா். அவா்கள் வீடு வீடாகச் சென்று கைரேகை பலன்கள் பாா்ப்பது, இரவு நேரத்தில் குடுகுடுப்பையுடன் வீடுகள் முன்பாக நின்று குறி சொல்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது அவா்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்கும் வகையில் இந்து கனிக்கா் எனும் பெயரில் சாதிச்சான்று கோரி வருகின்றனா். சவரணன் என்பவா் தலைமையில் அப்பிரிவைச் சோ்ந்த இளைஞா்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். அப்போது கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க அலுவலா்கள் அறிவுறுத்தியதால் அவா்கள் மனுவுடன் புறப்பட்டுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com