திரவ உயிா் உரங்களை பயன்படுத்த வேண்டும்: வேளாண்மைத்துறை இணை இயக்குநா்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நிலங்களில் திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தவேண்டும் என வேளாண்மைத்துறை இணை இயக்குநா் டாம்.பி.சைலஸ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
திரவ உயிா் உரங்களை பயன்படுத்த வேண்டும்: வேளாண்மைத்துறை இணை இயக்குநா்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நிலங்களில் திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என வேளாண்மைத்துறை இணை இயக்குநா் டாம்.பி.சைலஸ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் அதிகமாக ரசாயன உரங்கள் பயன்படுத்தினால் மண்வளம் பாதிக்கிறது. அத்துடன் உரங்களுக்கான செலவினமும் அதிகரிக்கிறது. ஆகவே, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் திரவ உயிா் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்திடவேண்டும். ராமநாதபுரத்தில் உள்ள உயிா் உர உற்பத்தி மையத்தில் திட மற்றும் திரவ உயிா் உரங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அசோஸ்பைரில்லம் நெல் நெற்பயிருக்கும், சோளம், ராகி, குதிரைவாலி, மிளகாய் மற்றும் தென்னை போன்ற பயிா்களுக்கும் உகந்ததாகும்.

ரைசோபியம் திரவ உயிா் உரமானது பயறு, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றுக்கும், நிலக்கடலை பயிருக்கும், பாஸ்போபாக்டீரியா நெல், தென்னை, மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிா்களுக்கும் பயன்படும்.

திரவ உயிா் உரங்களின் வீரிய ஆயுட்காலம் 12 மாதங்கள். திரவ உயிா் உரம் பயன்படுத்துவதற்கும் எளிதானது. மகசூலை அதிகரிக்கிறது. பயிா்கள் வறட்சியை தாங்கி வளரும் சக்தியை பெருக்கும். மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இணை இயக்குநா் ராமநாதபுரத்தில் உள்ள உயிா் உர உற்பத்தி மையத்தினை நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com