ராமநாதபுரத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகளையும் அடைக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமுடக்க தளா்வுகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகளையும் அடைக்க போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் வற்புறுத்தி வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமுடக்க தளா்வுகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகளையும் அடைக்க போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் வற்புறுத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப்பரவல் தாக்கத்தை தடுக்கும் வகையில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் சற்று குறைந்திருப்பதால் திங்கள்கிழமை முதல் (ஜூன் 7) தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, உணவகங்கள், காய்கனிக் கடைகள் மற்றும் பலசரக்கு, வாகன பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்டவைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பலசரக்குக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளை திறக்க அனுமதியில்லை என ஆட்சியா் அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால் அப்பகுதியில் உணவகங்களையும் திறக்கக் கூடாது என வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் வற்புறுத்துவது வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரண்மனைப் பகுதி மட்டுமின்றி வண்டிக்காரத் தெரு, காந்தியடிகள் தெரு என நகரின் பெரும்பாலான பகுதிகளில் பலசரக்குக் கடைகளை அடைக்க வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் அறிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com