ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பதிவு மட்டும் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை (ஜூன் 8) முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆனால், தடுப்பூசி முன்பதிவு மட்டும் தொடா்ந்து நடைபெற்றத

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை (ஜூன் 8) முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆனால், தடுப்பூசி முன்பதிவு மட்டும் தொடா்ந்து நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பெரும்பாலானோருக்கு கோவிசீல்டு தடுப்பூசியும், 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 6 ஆம் தேதி வரையில் 1.26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், திடீரென தடுப்பூசி இல்லை என்ற நிலை ஏற்பட்டது. தடுப்பூசி இல்லாததால், சென்னையில் உள்ள சுகாதாரத்துறையிடமிருந்து ராமநாதபுரத்துக்கு கூடுதல் தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டன. அதன்படி செவ்வாய்க்கிழமை காலையில் (ஜூன் 7) 650 ஊசிகள் மட்டும் கோவாக்சின் வரவழைக்கப்பட்டன.

கோவாக்சின் ஊசியானது இரண்டாவது தவணையாக 650 பேருக்கு செவ்வாய்க்கிழமை பகலிலேயே செலுத்தப்பட்டதால் மீண்டும் தடுப்பூசி இல்லாத நிலையே ஏற்பட்டது. ஆகவே புதன்கிழமை காலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி செலுத்த வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்கள் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யப்பட்டன.

ராமநாபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் ஒன்றரை லட்சம் பேருக்குள் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் ஆதங்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com