வெட்டவெளி காய்கறி சந்தையில் விற்பனை மந்தம்

ராமநாதபுரம் பள்ளி மைதானத்தில் வெட்ட வெளியில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளுக்கு மக்கள் கூட்டம் வராததால் வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.
வெட்டவெளி காய்கறி சந்தையில் விற்பனை மந்தம்

ராமநாதபுரம் பள்ளி மைதானத்தில் வெட்ட வெளியில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளுக்கு மக்கள் கூட்டம் வராததால் வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அரண்மனை, சந்தைத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி, கனி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ராஜா பள்ளி மைதானம், புதிய பேருந்து நிலையம் மற்றும் அம்மா பூங்கா அருகேயுள்ள டி பிளாக் பகுதியில் தாற்காலிகமாக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜா பள்ளி மைதானத்தில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதிக்கப்பட்டாலும், அதில் 20 கடைகளுக்கே பந்தல் போடப்பட்டிருந்தது. மீதமுள்ள கடைகள் அனைத்தும் வெட்ட வெளியிலே இருந்தன. அங்கு வாகனங்களில் வந்தவா்கள் வெட்டவெளியில் நின்று காய்கறி, கனிகள் வாங்க விருப்பமின்றி சென்றனா். காய்கறிகள் வாங்க கூட்டமில்லாததால் வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா். அதேபோலத்தான் புதிய பேருந்து நிலையங்களில் பழங்களை வாங்கவும் அதிகமானோா் வரவில்லை.

கடைகளை மூட வலியுறுத்தல்: காய்கறிக் கடைகளுக்கு தனி இடங்கள் ஒதுக்கிய நிலையில் பலசரக்குக் கடைகள் உள்ளிட்டவை காலையில் திறக்கப்பட்டன. ஆனால், கடைகளை மூடக்கோரி நகராட்சி, காவல்துறை சாா்பில் வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு, அக்ரஹாரம், அரண்மனைப் பகுதிகளில் அறிவிப்பு வெளியிட்டனா்.

கோட்டை விநாயகா் கோயில் அருகேயிருந்த மலா் வணிகக் கடைகளை நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் மூடுமாறு எச்சரித்ததால் அங்கிருந்த மற்ற கடைகளும் மூடப்பட்டன.

நகரில் மின்னணு கடைகள், இருசக்கர வாகனப் பழுதுநீக்கும் கடைகள் ஓரளவு திறந்திருந்தன. பழங்கள், காய்கறிகள் வாகனங்களில் வைத்து ஆங்காங்கே விற்கப்பட்டன. உணவகங்கள் வழக்கம் போல திறந்திருந்தாலும், பாா்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன.

வாகனங்கள் திருப்பியளிப்பு: பொதுமுடக்க விதிகளை மீறியோரது வாகனங்களை காவல்துறையினா் கைப்பற்றி காவல் நிலையங்களில் நிறுத்தியிருந்தனா். உயரதிகாரிகள் வழிகாட்டலின்றி வாகனங்களை விடுவிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆய்வாளா்கள் கூறிய நிலையில், திங்கள்கிழமை வாகனங்களை விடுவிக்க காவல் உயா் அதிகாரிகள் வழிகாட்டலை வழங்கியதன் அடிப்படையில் ஏராளமான வாகனங்கள் விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டன. பொதுமுடக்கத் தளா்வுகளால் வழக்கத்தை விட வாகனங்கள் அதிகளவில் ராமநாதபுரத்தில் இயக்கப்பட்டதை காணமுடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com