கமுதி அருகே கள் விற்ற பெண் கைது
By DIN | Published On : 10th June 2021 06:46 AM | Last Updated : 10th June 2021 06:46 AM | அ+அ அ- |

கமுதி அருகே சட்டவிரோதமாக கள் விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அபிராமம் காவல் சரகத்துக்குள்பட்ட பெருமாள்கோவில் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜபாண்டி மனைவி கஸ்தூரி (50). இவா் புதன்கிழமை காவல்கூட்டம் கிராமம் அருகே கள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சட்ட விரோதமாக கள் விற்ற கஸ்தூரியை அபிராமம் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரிடம் இருந்த 28 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.