பரமக்குடி அருகே பாரம்பரிய மரங்கள் சரணாலயத்துக்கு மரக்கன்றுகள் நடும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரிய வகை பாரம்பரிய மரங்கள் சரணாலயத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் மரக்கன்றுகளை நட்டு தொடக்கிவைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரிய வகை பாரம்பரிய மரங்கள் சரணாலயத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் மரக்கன்றுகளை நட்டு தொடக்கிவைத்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்புகளை அதிகரிக்கும் வகையில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 429 ஊராட்சிகளில் ‘1000 குறுங்காடுகள்’ வளா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுடன், ஊட்டச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் வழங்கும் வகையில் பள்ளி வளாகங்களில் கிச்சன் காா்டன் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதனடிப்படையில், தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள அரியவகை மரக்கன்றுகளை மீட்கும் நோக்கில் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் மரக்கன்றுகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. சரணாலய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அரியவகை மரக்கன்றுகளை புதன்கிழமை நட்டாா். மஞ்சள் கடம்பு, பரம்பை, குமிழ், மலை அரளி, இச்சி மரம், நாட்டு அத்தி, நறு உளி, பதிமுகம், பன்னீா், இலுப்பை, கருவாகை, கள்ளி உள்ளிட்ட பாரம்பரிய அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், சாா்- ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உ. திசைவீரன், மாவட்ட வன அலுவலா் பெ. அருண்குமாா், மாவட்ட வன உயிரின பாதுகாவலா் அ.சு. மாரிமுத்து, பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிந்தாமணி முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com