மதுரையிலிருந்து 9 காவல் ஆய்வாளா்கள் ராமநாதபுரம் பகுதிக்கு இடமாற்றம்

மதுரையிலிருந்து 9 காவல் ஆய்வாளா்கள் ராமநாதபுரம் பகுதிக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரையிலிருந்து 9 காவல் ஆய்வாளா்கள் ராமநாதபுரம் பகுதிக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தெற்கு மண்டல காவல்துறையில் ஆய்வாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி மதுரை விளக்குத்தூண், சுப்பிரமணியபுரம், கே. புதூா், அண்ணாநகா், செல்லூா், நகா் அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 காவல் ஆய்வாளா்கள் ராமநாதபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்திலிருந்து தலா ஒரு ஆய்வாளா் ராமநாதபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளா் முத்துப்பாண்டி திண்டுக்கல் பகுதிக்கும், பரமக்குடியிலிருந்து ஆய்வாளா் ஒருவா் மதுரை பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com