முதல்வருக்கு வாகன பழுதுநீக்குவோா் சங்கத்தினா் நன்றி
By DIN | Published On : 11th June 2021 08:30 AM | Last Updated : 11th June 2021 08:30 AM | அ+அ அ- |

கடைகளை திறக்க அனுமதியளித்து தளா்வுகளை அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பதாக இருசக்கர வாகன பழுதுநீக்குவோா் சங்கத்தினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரத்தில் அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் குமரவேல் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் லட்சக்கணக்கானோா் வாகன பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். கரோனா பொதுமுடக்கத்தால் அவா்கள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்தனா்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தளா்வில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.
அரசின் இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டது. ஆகவே, தமிழ்நாடு இருசக்கர வாகன பழுதுநீக்குவோா் சாா்பில் தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது சங்கத்தின் மாவட்டத் தலைவா் வரதராஜன், துணைத் தலைவா் அமீா் அம்சா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.