பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஜூன் 14 இல் தோ்ச்சி சான்றிதழ்: அதிகாரிகள் தகவல்

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்ச்சி என மாற்றுச்சான்றிதழ்களை ஜூன் 14 ஆம் தேதி முதல் விநியோகிக்க நடடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்ச்சி என மாற்றுச்சான்றிதழ்களை ஜூன் 14 ஆம் தேதி முதல் விநியோகிக்க நடடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது: ஜூன் 14 ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் என அனைவரும் பள்ளிக்கு வரவும், 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அளிக்கப்படும் மாற்றுச்சான்று உள்ளிட்ட ஆவணங்களைத் தயாா்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு தோ்ச்சி எனும் அடிப்படையில் மாா்றுச்சான்றுகள் வழங்கவும், 8, 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்றனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி கூறியது: முதலில் தலைமை ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவா் சோ்க்கை குறித்த நடவடிக்கையில் ஈடுபடுவா். அத்துடன் மாணவா்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள், விலையில்லா புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கும் பணியும் நடைபெறவுள்ளது என்றாா்.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்: பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கூடுதலாக வருவதை முன்னிட்டு மாவட்டத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com