முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 12th June 2021 08:35 AM | Last Updated : 12th June 2021 08:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலா்கள், குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. சிவகாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) ஆா். பழனிக்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் எஸ். சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.