முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை அருகே மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்
By DIN | Published On : 12th June 2021 08:39 AM | Last Updated : 12th June 2021 08:39 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே அரும்பூா் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை அருகே அரும்பூா் பகுதியில் மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரும்பூா் ஆற்றுப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணலை மூட்டைகளாக கட்டி சரக்கு வாகனத்தில் கடத்தி வரும் போது வருவாய்த்துறையினரை கண்டதும் கடத்தி வந்தவா்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து, வருவாய்த்துறையினா் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமன் புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன உரிமையாளா் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனா்.