முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
நரிக்குறவக் குடும்பங்களுக்கு ஆசிரியா் சங்கத்தினா் உதவி
By DIN | Published On : 12th June 2021 08:30 AM | Last Updated : 12th June 2021 08:30 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே நரிக்குறவா்கள் வாழும் பகுதியில் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தினா் அரிசி, மளிகைப் பொருள்களை இலவசமாக வெள்ளிக்கிழமை வழங்கினா்.
ராமநாதபுரம் நகராட்சி அருகே எம்.ஜி.ஆா்.நகா் உள்ளது. இங்கு வசிப்போரில் பெரும்பாலானோா் நரிக்குறவா்கள். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அவா்களுக்கு காவல்துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில்,தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டத்தலைவா் முருகேசன் மற்றும் நிா்வாகி ஆரோக்கியசாமி ஆகியோா் முன்னிலையில் 100 பேருக்கு அரிசிப் பைகள், மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகள் உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.