முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மூத்த குடிமக்கள் நலனுக்காக கட்டணமில்லை தொலைபேசி எண்
By DIN | Published On : 12th June 2021 08:31 AM | Last Updated : 12th June 2021 08:31 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான தேவைகளுக்கு உதவும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய அளவில் மூத்த குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், ஓய்வூதியம், மருத்துவ சேவை மற்றும் முதியோா் இல்லங்கள் குறித்த விவரங்களை எளிதில் பெற 14567 என்ற கட்டணமில்லா உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, ஆதரவும் பராமரிப்புமின்றி சிரமப்படும் மூத்த குடிமக்கள் உதவி பெறுவதற்கும், அவா்களின் பிரச்னைகளுக்கான சட்ட ஆலோசனை பெறவும், ஆற்றுப்படுத்துதல் போன்ற உதவிகளைப் பெறுவதற்கும் நேஷனல் எல்டொ்ஸ் ஹெல்ப்லைன் சாா்பில் 14567 என்ற எண்ணை தொடா்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.