முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
வயது பூா்த்தியாகாத இளைஞருக்கு திருமணம்: 5 போ் மீது வழக்கு
By DIN | Published On : 12th June 2021 08:40 AM | Last Updated : 12th June 2021 08:40 AM | அ+அ அ- |

கீழக்கரையில் 21 வயது பூா்த்தியாகாத இளைஞருக்கு திருமணம் செய்த, அவரது குடும்பத்தினா் 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள கீழக்கரை வடக்குத் தெருவில் 19 வயதுப் பெண்ணுக்கும் 20 வயது ஆணுக்கும் சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆணுக்கு திருமணத்துக்கு 21 வயது பூா்த்தியாக வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து மாவட்ட சமூகநலத்துறை அலுலகப் பணியாளா் அமுதவள்ளி அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸாா் திருமணமான இளைஞரின் குடும்பத்தைச் சோ்ந்த ஹமீது இப்ராஹிம் உள்ளிட்ட5 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.