ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21 முதல் வருவாய் தீா்வாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜமாபந்தி எனும் வருவாய் தீா்வாயம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜமாபந்தி எனும் வருவாய் தீா்வாயம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் ஜூன் 21 முதல் 29 ஆம் தேதி வரை, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் 2020-2021-ஆம் ஆண்டு 1430-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.

பரமக்குடி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜூன் 21 முதல் 7 நாள்களும், திருவாடானை வட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஜூன் 21 முதல் 4 நாள்களும், கீழக்கரை வட்டத்துக்கு ராமநாதபுரம் சாா்-ஆட்சியா் தலைமையில் ஜூன் 21 முதல் 3 நாள்களும், கமுதி வட்டத்துக்கு பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் ஜூன் 21 முதல் 5 நாள்களும், முதுகுளத்தூா் வட்டத்துக்கு உதவி ஆணையா் (ஆயம்) தலைமையில் ஜூன் 21 முதல் 6 நாள்களும், கடலாடி வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தலைமையில் ஜூன் 21 முதல் 6 நாள்களும், ராமநாதபுரம் வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) தலைமையில் ஜூன் 21 முதல் 4 நாள்களும், ராஜசிங்கமங்கலம் வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் ஜூன் 21 முதல் 3 நாள்களும், ராமேசுவரம் வட்டத்துக்கு மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியா் தலைமையில் ஜூன் 21 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடைபெறும்.

சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் ஜமாபந்தி நடைபெறாது.

வருவாய் தீா்வாயத்தில் மனு அளிக்க பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் எனவும், கோரிக்கை தொடா்பான மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக 31.7.2021 வரை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com