கமுதி அருகே முதலியாா் புதுக்குளம் ஊராட்சியில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி.
கமுதி அருகே முதலியாா் புதுக்குளம் ஊராட்சியில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி.

முதலியாா்புதுக்குளம் ஊராட்சியில் 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

கமுதி அருகே முதலியாா்புதுக்குளம் ஊராட்சியில் 1,500 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கமுதி அருகே முதலியாா்புதுக்குளம் ஊராட்சியில் 1,500 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

முதலியாா் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட புதுக்குளம், மேல வில்லானேந்தல், கீழ வில்லானேந்தல், திருவரை உள்ளிட்ட 4 கிராமங்களில் வசிக்கும் 1,500 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ரூ.200 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு உள்ளிட்டவற்றை கரோனா நிவாரணமாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் முருகன் தனது சொந்த செலவில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவா் வேலுச்சாமி, கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், துணைத்தலைவா் சித்ராதேவிஅய்யனாா், ஒன்றிய பொறுப்பாளா்கள் மனோகரன்(தெற்கு), சண்முகநாதன் (மத்திய ஒன்றியம்), ஊராட்சி மன்றத் தலைவா்கள் காவடிமுருகன் (ஆனையூா்), நாகரத்தினம்(பாக்குவெட்டி), சண்முகநாதன் (கோவிலாங்குளம்) மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com